பள்ளி இடத்தில் வருவாய்த்துறை அலுவலகம் கட்ட எதிர்ப்பு: ஒத்தக்கடையில் முழு கடையடைப்பு

மதுரை உலகனேரியில் ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 600–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சொந்தமான 2 ஏக்கர் 82 சென்ட் நிலத்தில் வருவாய்த்துறை அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு அரசு த

Update: 2017-11-03 22:15 GMT

மதுரை,

மதுரை உலகனேரியில் ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 600–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சொந்தமான 2 ஏக்கர் 82 சென்ட் நிலத்தில் வருவாய்த்துறை அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு ஒத்தக்கடை வியாபாரிகள் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர், யா.ஒத்தக்கடை, நரசிங்கம் கிராம கமிட்டியை சேர்ந்தவர்கள், அனைத்து வியாபாரிகள் நலச்சங்கங்களை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்