அனுமதியின்றி இயங்கிய 38 சாயப்பட்டறைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிப்பு

எடப்பாடி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 38 சாயப்பட்டறைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிப்பு

Update: 2017-11-02 22:30 GMT
எடப்பாடி,

எடப்பாடியை அடுத்த பழைய எடப்பாடி, கவுண்டம்பட்டி, வெள்ளாண்டிவலசு பகுதியில் நூல்களுக்கு சாயம் போடும் சாயப்பட்டறைகள் ஏராளமாக உள்ளன. இதிலிருந்து சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகள் வெளியேற்றப்பட்டதால் சுற்றுசூழல் மாசடைந்தது. இதுகுறித்து வந்த புகாரையடுத்து அனுமதியின்றி இயங்கிவரும் சாயப்பட்டறைகளை இடித்து அகற்ற கலெக்டர் ரோகிணி தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் எடப்பாடி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறைகளை இடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து நேற்று எடப்பாடி பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளை அகற்ற சுற்றுசூழல் மாவட்ட பொறியாளர் ஜெயலட்சுமி, சங்ககிரி உதவி கலெக்டர் ராமதுரைமுருகன், சுற்றுசூழல் பறக்கும் படை பொறியாளர் பழனிசாமி, உதவி பொறியாளர் கிருஷ்ணன், உதவி சுற்றுசூழல் பொறியாளர் செல்வகுமார், மின்சார வாரிய உதவிபொறியாளர் கதிரேசன் ஆகியோர் பொக்லைன் எந்திரங்களை கொண்டு அனுமதியின்றி இயங்கிய 38 சாயப்பட்டறைகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்