தமிழக அரசின் செயல்பாடுகளில் மக்களுக்கு திருப்தி இல்லை திருநாவுக்கரசர் பேட்டி
தமிழக அரசின் செயல்பாடுகளில் மக்களுக்கு திருப்தி இல்லை என்று காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
திருச்சி,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் பலியாகி உள்ளனர். தமிழக அரசு வெள்ள நிவாரண பணியில் துரிதமாக செயல்பட வேண்டும். மாவட்டந்தோறும் ஒவ்வொரு அமைச்சரை நியமித்து, அதிகாரிகளுடன் சென்று வெள்ள சேத பகுதிகளை பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட் களை வழங்குவதோடு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ள சேத பகுதிகளை பார்வையிட வேண்டும். மத்திய அரசு கணிசமான தொகையை நிதிஉதவியாக வழங்க வேண்டும். இப்போது தமிழக அரசின் செயல்பாடுகளில் மக்களுக்கு திருப்தி இல்லை.
ஆட்சியாளர்கள் அவர்களது உட்கட்சி பிரச்சினையில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். மக்களிடம் இருந்து இந்த அரசு வெகு தூரம் விலகி சென்று கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். அதனால் தான் அந்த தினமான நவம்பர் 8-ந் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கிறோம்.
ஆகவே வருகிற 8-ந் தேதி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும், மாலையில் பொதுக்கூட்டமும் நடக்கிறது. தற்போது தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. வருங்காலங்களில் மோடிக்கு எதிர்ப்பான நிலையில் உள்ள அனைத்து கட்சிகளும் ஓரணியில் சேர வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.