நெல்லை அருகே ஹெல்மெட் அணியாமல் வந்தவரிடம் மோதிரத்தை பறித்த போலீஸ் அதிகாரி

நெல்லை தாழையூத்தில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

Update: 2017-11-02 20:45 GMT

நெல்லை,

நெல்லை தாழையூத்தில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் தலையில் ஹெல்மெட் அணியவில்லை. மேலும் வாகனத்தில் பெட்ரோல் டேங்க் மீது குழந்தையை வைத்திருந்தார்.

இதைக்கண்ட போலீசார் அவரை மடக்கினர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தது குறித்து கேட்டனர். அப்போது அவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அபராதத்துக்கு பதிலாக போலீஸ் அதிகாரி ஒருவர், ஹெல்மெட் அணியாமல் வந்தவரிடம் மோதிரத்தை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், வயர்லெஸ் கருவியில் பேசி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி எச்சரித்து உள்ளார். இந்த சம்பவம் நெல்லை மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்