சர்க்கரை விலை ரூ.25 ஆக உயர்வு: சேலத்தில் ரேஷன் கடை ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
சேலத்தில் சர்க்கரை விலை ரூ.25 ஆக உயர்த்தப்பட்டதால் ரேஷன் கடை ஊழியர்களுடன் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
தமிழகம் முழுவதும் 1½ கோடிக்கு அதிகமான ரேஷன் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.50-க்கு வழங்கப்பட்டது.
இந்தநிலையில், ரேஷன் கடைகளில் சர்க்கரை ஒரு கிலோ ரூ.25 ஆக உயர்த்தப்படுவதாகவும், இந்த விலை உயர்வு நவம்பர் 1-ந் தேதியான நேற்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சுமார் 18 லட்சம் கார்டுகளுக்கு மட்டும் அந்தியோஜனா திட்டத்தின் கீழ் பழைய விலையான ரூ.13.50-க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சர்க்கரை விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் ஏற்கனவே ரூ.13.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை நேற்று பொதுமக்களுக்கு ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு கிலோ ரூ.11.50 வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சர்க்கரை விலை உயர்வு தொடர்பான பட்டியல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒட்டப்பட்டுள்ளது.
சர்க்கரை விலை உயர்வால் பல ரேஷன் கடைகளில் ஊழியர்களுக்கும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சேலத்தில் ரத்தினசாமிபுரம், மணக்காடு, பெரமனூர், கிச்சிப்பாளையம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் சர்க்கரை இருப்பு இல்லாததால் நேற்று சர்க்கரை வினியோகம் செய்யப்படவில்லை. ஒருசில ரேஷன் கடைகளில், சர்க்கரை விலை உயர்வு தங்களுக்கு தெரியாததால் குறைந்த அளவிலேயே பணம் கொண்டு வந்ததாக கூறி பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் திரும்பி சென்றதை காணமுடிந்தது. பொதுவினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.