மழை நீரை வெளியேற்றக்கோரி செங்கல்பட்டில் சாலை மறியல்
செங்கல்பட்டில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள மகாலட்சுமி நகர், ஜே.சி.கே. நகர் மழைநீர் தேங்கி நிற்கிறது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள மகாலட்சுமி நகர், ஜே.சி.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி செங்கல்பட்டு – காஞ்சீபுரம் சாலையில் பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.