திருமணம் செய்ய வற்புறுத்தி நர்சை காரில் கடத்திய வாலிபர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்கு
மார்த்தாண்டம் அருகே திருமணம் செய்ய வற்புறுத்தி நர்சை காரில் கடத்திய 4 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திக்குறிச்சி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 24) என்பவருக்கும் இடையே பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதை அறிந்த சதீஷ்குமார், அவரை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தார். எனவே, அவரை கடத்தி சென்று திருமணம் செய்ய வாலிபர் திட்டமிட்டார்.
சம்பவத்தன்று இளம்பெண் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சதீஷ்குமார், அவரது நண்பர்கள் ராஜன், மனோன்மணி உள்பட 4 பேர் ஒரு காரில் வந்தனர். அவர்கள் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.
பின்னர், அவரை ஒரு வீட்டில் சிறைவைத்து சதீஷ்குமாரை திருமணம் செய்ய வற்புறுத்தினர். அத்துடன், பதிவு திருமணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். ஆனால், இளம்பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து, தன்னை வீட்டிற்கு விடுமாறு அடம்பிடித்தார். இதையடுத்து இளம்பெண்ணை காரில் அழைத்து வந்து வீட்டின் அருகே இறக்கி விட்டு சென்றனர்.
இதுகுறித்து இளம்பெண் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், ‘திருமணம் செய்ய வலியுறுத்தி சதீஷ்குமார் உள்பட 4 பேர் தன்னை கடத்தியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் சதீஷ்குமார் உள்பட 4 வாலிபர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.