அலங்கியத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 52 பேர் கைது
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அலங்கியம்,
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரம் அருகே அலங்கியத்தில் உள்ள ரேஷன் கடை முன்பு தடையை மீறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் ரகுபதி முன்னிலை வகித்தார். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 52 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கு உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை போலீசார் விடுவித்தனர்.