கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரே‌ஷன் அரிசி சிக்கியது 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரே‌ஷன் அரிசி சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-10-22 22:30 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திரா நோக்கி சென்ற சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற ஒரு மினிவேனை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில் 2 டன் ரே‌ஷன் அரிசி இருந்தது. அரிசியை திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார், மன்னார்குடியை சேர்ந்த வேன் டிரைவர் ஜீவா (வயது 28), சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ரஞ்சித் (22) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்