கடவுள் சிலைகளும்.. கலியுக பிரம்மாக்களும்..
சோழர் கால சிற்பக்கலை உலகப் புகழ்பெற்றது. மிகவும் பழமை வாய்ந்தது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் சற்று கூட பழமை மாறாமல் தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் சோழர் காலத்து பாணியில் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
சோழர் கால சிற்பக்கலை உலகப் புகழ்பெற்றது. மிகவும் பழமை வாய்ந்தது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் சற்று கூட பழமை மாறாமல் தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் சோழர் காலத்து பாணியில் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. சுவாமிமலையில் சிலைகளை வடிவமைக்கும் பணியில் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு சாமி சிலைகள் மட்டுமின்றி தலைவர்களின் சிலைகளையும் வடிவமைக்கின்றனர்.
சிற்பக்கலையில் சுவாமிமலை தேவசேனாதிபதி ஸ்தபதி பிரசித்தி பெற்றவர். அவரது மறைவிற்கு பிறகு தந்தை வழியில் மகன்கள் ராதாகிருஷ்ணன் ஸ்தபதி, ஸ்ரீகண்ட ஸ்தபதி, சுவாமிநாதன் ஸ்தபதி ஆகியோரும் இந்த கலைப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பல விருதுகளை பெற்றுள்ளனர்.
சிலைகள் தயாரிக்கும் நுட்பங்கள் பற்றியும், வெளி நாடுகளுக்கு சிலைகளுக்கு ஏற்றுமதி செய்யும் முறைகள் குறித்தும் தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் வளர்ச்சி கழக (பூம்புகார்) முன்னாள் இயக்குனர் ஸ்ரீகண்ட ஸ்தபதியுடன் நமது உரையாடல்:
சிலைகள் உருவாக்கப்படுவதன் பின்னணி என்ன?
பஞ்ச பூதங்களுக்கு ஆதிகாலத்தில் மனிதன் பயந்து வாழ்ந்தான். ஆதலால் அவற்றை தெய்வங் களாக பாவித்து பய பக்தியுடன் வணங்கினான். மனிதன் பயந்ததால் பக்தி வந்தது. பக்தி பயமாக மாறியது. பக்தியை பயமாக மாற்றி மனிதனை நல்வழிப்படுத்தும் கடவுளை அவன் சிலைகள் வடிவத்தில் வணங்கினான். இதற்காகத்தான் சிலைகள் உருவாகின. மனிதன் ஐம்புலன்களை அடக்கி வாழவும், தர்மநெறியில் நடக்கவும் சிலை வழிபாடு உறுதுணையாக ஆனது.
முன்பு செம்பு மற்றும் ஈயத்தால் ஆன செப்பு திரு மேனிகள் மட்டுமே இருந்தன. அதன்பின்னர் செம்பு, பித்தளை, ஈயம், தங்கம், வெள்ளி ஆகிய 5 உலோகங்களால் செய்யப்பட்ட பஞ்சலோக சிலைகள் தயாரிக்கப்பட்டன. இதில் செம்பு 82 சதவீதமும், பித்தளை 15 சதவீதமும், ஈயம் 3 சதவீதமும், தங்கம் மற்றும் வெள்ளி சிறிதளவும் சேர்க்கப்படுகின்றன.
ஒரு சிலை உருவாக எத்தனை நாட்கள் ஆகும்?
பொதுவாக 2 அடி உயர சிலை தயாரிப்பதற்கு குறைந்தது 45 நாட்களாகும். மழைக்காலம் என்றால் கூடுதல் நாட்கள் தேவைப்படும். சிலையின் உயரத்துக்கு ஏற்ப அதிக நாட்கள் தேவைப்படும்.
எதை அடிப்படையாகக்கொண்டு சிற்பத்தை வடிவமைக்கிறீர்கள்?
சிற்ப சாஸ்திரத்தை அடிப் படையாகக்கொண்டு வடிவமைக்கிறோம். சிலைகளை தயாரிக்கும் முன்பு அந்த சிலை எந்த ஊருக்கு செல் கிறதோ அந்த ஊரின் பெயரை வைத்து வாஸ்து சாஸ்திரம் பார்ப்போம். சிற்ப சாஸ்திர ஆயாதி கணிதப்படி ஒவ்வொரு சிலைக்கும் ஆயுட் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. சிற்பங்கள் உருவாக்க பொருத்தங்களும் பார்ப்போம். குறைந்தது 8 பொருந்தங்களாவது இருக்கவேண்டும். அதில் முக்கியமானது ஆயுட்கால பொருத்தம். ஆயுள் பொருத்தம் பார்த்து செய்தால் சிலைகளின் ஆயுள் குறையாது. கோவில் மற்றும் வீடுகளில் வைக்கப்படும் சிலைகளுக்கு மட்டுமே கண்களை திறந்து கொடுப்போம். காட்சி பொருளாக வைக்கக்கூடிய சிலைகளுக்கு கண்களை திறந்து கொடுக்க மாட்டோம்.
வெளிநாட்டில் உள்ளவர்களின் சிலை வழிபாட்டு மனநிலை எப்படி இருக்கிறது?
வெளிநாட்டில் உள்ளவர்கள் நடராஜர், சிவகாமி, சிவ தாண்டவ கோலத்தில் உள்ள சிவன், பல்வேறு வகையான விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், நரசிம்மர் வடிவமுள்ள சிலைகளை அதிகம் விரும்புகிறார்கள். அதுபோன்ற சிலைகள் அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன.
வெளிநாட்டிற்கு சிலைகளை அனுப்ப அரசின் விதிமுறைகளை பின்பற்றவேண்டும். தயாராகும் சிலையின் முன்புறம் மற்றும் பின்புற பகுதிகளை போட்டோ எடுத்துக் கொள்வோம். பின்னர் அந்த சிலைகள் பற்றிய விவரங்களையும், போட்டோக்களையும் சென்னையில் உள்ள மத்திய தொல்பொருள் ஆய்வுதுறைக்கு அனுப்பவேண்டும். அவர்கள் சிலைகளை நேரில் பார்வையிட்டு தடையில்லா சான்றிதழ் அளிப்பார்கள். அதன் பின்பே சிலைகளை வெளிநாட்டிற்கு அனுப்ப முடியும். இந்த சான்றிதழ் பெற குறைந்த பட்சம் ஒரு மாதம் வரை ஆகிவிடும். இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, சுவீடன் உள்பட ஏராளமான நாடுகளுக்கு சிலைகளை அனுப்பியுள்ளோம்.
சிலைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறதா?
சிலைகளுக்கு முன்பு 5 சதவீத வாட் வரி இருந்தது. தற்போது 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இதன் மூலம் சிலைகள் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படவேண்டும்.
சிலைகளுக்கு விலை நிர்ணயம் செய்வது எப்படி?
1½ அடி உயரம் வரையுள்ள சிலைக்கு வேலை ஆட்கள் மற்றும் மற்ற செலவுகளை வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 2 அடியை தாண்டினால் கிலோ கணக்கு அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப் படும். நல்ல நேரம் பார்த்துதான் சாமி சிலைகளுக்கான பணிகளை தொடங்குவோம்.
சிலைகள் வடிவமைப்பில் பெண்கள் ஈடுபடுகின்றனரா?
சாமி சிலைகள் தயாரிக்கும் பணி சற்று கடினமானது. இந்த கடினமான பணிகளை பெண்களால் செய்ய முடியாது. மேலும் அவர்கள் உடல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிலை தயாரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபடுவது கிடையாது.
நாங்கள் சாமி சிலைகள் மட்டுமின்றி சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்கள் சிலை களையும் வடிவமைக் கிறோம். சாமி சிலைகள் செய்வதை விட தலைவர் களின் சிலைகளை வடிவமைப்பது சற்று சிரமமானது.
சிற்ப வடிவமைப்பில் சுவாமிமலை சிறப்பு பெற்றதற்கு என்ன காரணம்?
சிலை தயாரிக்க அடிப்படை தேவையாக இருப்பது மண். இறைவனின் அருளால் சுவாமி மலையில் உள்ள காவிரி ஆற்றில் வண்டல் மண் கிடைக் கிறது. இதுபோன்ற மண் தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் இல்லை. வண்டல் மண்ணின் தரம் சிறிது குறைந்தாலும் சிலைகளில் கீறல்கள் ஏற்பட்டு விடும். ஆற்றில் தண்ணீர் நிறைய வரும்போது மண் தட்டுப்பாடின்றி எங்களுக்கு கிடைக்கும். தண்ணீர் வராத சமயத்தில் மண் தட்டுப்பாடு ஏற்படும். சிலைகளை தயாரிக்க குங்கிலியம், மெழுகு போன்ற மூலப்பொருட்களும் தேவை.
சிலை தயாரிக்கும் பணி எத்தனை கட்டங்களாக, எப்படி நடக்கிறது?
சிலை வார்க்கும் பணி 3 கட்டங்களாக நடக்கும். முதலில் மெழுகு கலந்த கலவையை சிற்ப சாஸ்திரப்படி உத்தம தச தானம், மத்திம தச தானம், அதம தச தானம் ஆகிய பிராமணங்களில் தென்னை ஓலை கொண்டு அளவு கணக்கீட்டு தேவையான தேன் மெழுகை சேர்த்து ஆபரணம் மற்றும் அலங்கார வேலைகளை செய்வோம். பின்பு இறுதி தீர்மானம் செய்து முதல் கட்டப்பணிகளை முடிப்போம். அடுத்து அதன் மீது வண்டல் மண்ணையும், களி மண்ணையும் பூசி கரு தயார் செய்ய வேண்டும். கரு உடைந்து விடாமலும், வெடித்து விடாமலும் இருப்பதற்காக அதன் மேல் கம்பியை சுற்ற வேண்டும். இதையும் மீறி சில சமயங்களில் கரு உடைந்துவிடுவது உண்டு. அதனால் சிற்பிகள் மிகுந்த கவனத்துடன் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
கம்பியை சுற்றிய பிறகு தீயிட வேண்டும். தீயின் தாக்கத்தால் உள்ளிருக்கும் மெழுகு அதற்கென்று போடப்பட்டிருக்கும் துவாரத்தின் வழியே வெளியேறும். பின்பு கருவை மண்ணுக்குள் புதைப்போம். 82 சதவீதம் செம்பு, 13 சதவீதம் பித்தளை, 3 சதவீதம் ஈயம், சிறிதளவு தங்கம், வெள்ளி ஆகியவற்றை கலந்து கொதிக்கவிடுவோம். இந்த ஐம்பொன் கலவை கொதிக்கும்போது அதனை சிலையின் அடிப்பகுதியில் போடப்பட்டிருக்கும் துளையில் ஊற்றுவோம். பின்னர் குளிர வைத்து, வெளியே எடுத்து உடைத்தால் சிலை தயாராகி விடும். இத்துடன் 2-வது கட்ட பணி முடிவடைகிறது. அடுத்த கட்ட பணியாக சிலையை உரசி, சீவி இறுதியாக முகம் சம்பந்தபட்ட பணிகளை முடித்தால் சிலை முழுமை அடைந்து விடும்.
சிலை வடிவமைப்பில் இளைய தலைமுறையினரின் பங்கு..?
சிலைகள் வடிவமைப்பில் இளைய தலைமுறையினர் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். மத்திய அரசின் கைவினைப்பொருட்கள் அபிவிருத்தி ஆணையம் மூலம் நிதியை பெற்று தமிழ்நாடு அரசு கைவினைப்பொருட்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்) மூலம் இளைய தலைமுறையினருக்கு சிலைகள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. சிற்பம் வடிக்கும் பணியில் நாங்கள் பல தலைமுறையாக ஈடுபட்டுவருகிறோம். எங்கள் தந்தை தேவசேனாதிபதி ஸ்தபதி 1984-ம் ஆண்டு ஜனாதிபதி விருதினை பெற்றுள்ளார்.