உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி டி.ஐ.ஜி.- போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
தஞ்சையில் உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி டி.ஐ.ஜி.- போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
தஞ்சாவூர்,
பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி நடைபெறும். அதன்படி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், ரத்தினகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் கலந்து கொண்டு நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போலீசாரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.