மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஒட்டன்சத்திரம்- பாச்சலூர் இடையே மலைப்பாதையில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம்், புலிக்குத்திக்காடு வழியாக பாச்சலூர், கே.சி.பட்டி, பெரியகுளம், வத்தலக்குண்டு, கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று அதிகாலை ஒட்டன்சத்திரம்- பாச்சலூர் செல்லும் மலைப்பாதையில் பெரியபாறை அருகே மரம் ஒன்று வேருடன் சாய்ந்து விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் வனச்சரகர் செந்தில்குமார், மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயபால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பின்னர் சாலைப்பணியாளர்கள், பொதுமக்களின் உதவியுடன் சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் மலைப்பாதையில் ஏராளமான ராட்சத மரங்கள் உள்ளன. அவை விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு அதனையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.