பிளஸ்-2 மாணவி தற்கொலை: ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
அறச்சலூர் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
அறச்சலூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பேரண்டஅள்ளி கொத்தூரை சேர்ந்தவர் சேகர். அவருடைய மகள் தேவயானி (வயது 17).
இவர் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே கோபாலிபாறையில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து அறச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தேவயானி விஷம் குடித்துவிட்டார். அவரை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தபோது, பள்ளிக்கூட வேதியியல் ஆசிரியை செல்வலட்சுமி தன்னை கண்டித்து தாக்கியதாகவும், இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்துவிட்டதாகவும் கூறினார்.
இந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தேவயானி கடந்த 17-ந் தேதி இரவு இறந்தார்.
இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மாணவி தேவயானியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணி அளவில் அறச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு திரண்டனர். இதனைத்தொடர்ந்து பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டார்கள்.
அப்போது அங்கு வந்த பள்ளி தலைமை ஆசிரியர் தேவயானியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர்கள் தலைமை ஆசிரியரிடம் கூறும்போது, ‘வேதியியல் ஆசிரியை செல்வலட்சுமி தேவயானியை ரிக்கார்டு நோட்டு எழுதக்கூறி திட்டி தாக்கியுள்ளார்.
மேலும் சரியாக படிக்கவில்லை என்று கூறி அவரை வகுப்புக்கு வெளியே நிறுத்தியுள்ளார். இதுதவிர ஆசிரியை கோபாலிபாறை பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளை ஒழுக்கமில்லை என்று கூறி அடிக்கடி திட்டியும் வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த தேவயானி தற்கொலை செய்து கொண்டாள். எனவே அவளது தற்கொலைக்கு காரணம் வேதியியல் ஆசிரியைதான். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு தலைமை ஆசிரியர் கூறும்போது, ‘ரிக்கார்டு நோட்டு எழுதக்கூறி மாணவி தேவயானியை வேதியியல் ஆசிரியை திட்டி தாக்கியுள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால் எங்கள் பள்ளிக்கு இன்னும் ரிக்கார்டு நோட்டு வரவில்லை. அப்படி இருக்கும்போது எவ்வாறு நீங்கள் கூறுவது உண்மையாகும். ஆசிரியை திட்டியிருந்தாலும் நீங்கள் எங்களிடம் முதலிலேயே புகார் கூறிஇருந்தால் விசாரித்து உடனே நடவடிக்கை எடுத்திருப்போம்.
இனிமேல் இதுபோன்று ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளை திட்டுவதாகவும், அடிப்பதாகவும் புகார் வந்தால் உடனே எங்களிடம் தகவல் தெரிவியுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.’ என்றார்.
இதில் சமாதானம் அடையாத தேவயானியின் உறவினர்கள் பள்ளிக்கூடம் முன்பு உள்ள காங்கேயம்-ஈரோடு ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு ஆர்.டி.ஒ. நர்மதாதேவி, பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், அறச்சலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் மற்றும் போலீசார், அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் கூறும்போது, ‘விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றனர்.
இதை ஏற்றுக்கொண்ட தேவயானியின் உறவினர்கள் மதியம் 12 மணி அளவில் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் காங்கேயம்- ஈரோடு ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு) முத்துக்கிருஷ்ணன் பள்ளிக்கு சென்று ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் தேவயானியின் உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தினார்.