டிரைவர்கள்- கண்டக்டர் பலி ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து மவுன அஞ்சலி

டிரைவர்கள்- கண்டக்டர் பலி ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து மவுன அஞ்சலி

Update: 2017-10-20 22:30 GMT
தஞ்சாவூர்,

நாகை மாவட்டம் பொறையாறு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் கட்டிடம் இடிந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தஞ்சை பழைய பஸ்நிலையத்தில், அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவர்கள் கூறுகையில், பொறையாறு பணிமனையின் கட்டிடம் இடிந்து விழுந்து உயிர் இழந்த 8 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாக இந்த மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கோர விபத்தில் உயிர் இழந்தோர், காயம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு உரிய நிதி உதவி வழங்கவேண்டும் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்க போக்குவரத்து கழக நிர்வாகிகள், போக்குவரத்து அமைச்சர் மற்றும் முதல்-அமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

இந்த மவுன அஞ்சலியில் ஈடுபட்டவர்கள் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சட்டையில் ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்திருந்தனர்.

மேலும் செய்திகள்