டெங்கு தடுப்பு பணி குறித்து கலெக்டர் ஆய்வு 2 பேருக்கு தலா ரூ.1000 அபராதம்
திருப்பூர் 1-வது மற்றும் 2-வது மண்டல பகுதிகளில் திடீரென ஆய்வு செய்த கலெக்டர் 2 பேருக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்தார். மேலும் ஒரு வீட்டின் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் திருப்பூர் மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி கோபால் நியமிக்கப்பட்டு, டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி நேற்று காலை 1-வது மற்றும் 2-வது மண்டல பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை திடீரென ஆய்வு செய்தார்.
1-வது மண்டலம் 1-வது வார்டு தண்ணீர்பந்தல் பகுதிக்கு சென்ற கலெக்டர் அங்கு சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான ஒர்க்ஷாப் மாடிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு தண்ணீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் டயர்கள் அதிக அளவில் போடப்பட்டிருந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளிடம் சுப்பிரமணிக்கு ரூ.1000 அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அபராதம்
மேலும் தொடர்ந்து இதுபோன்ற சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டால் கடைக்கு ‘சீல்‘ வைக்கப்படும் என்றும் கலெக்டர் எச்சரித்தார். இதேபோல் அதே பகுதியில் கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமாற்ற நிலையில் வீட்டு சுற்றுப்புறத்தை வைத்திருந்த தமிழ்செல்வி என்பவருக்கு சொந்தமான வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து 2-வது மண்டலம் 20-வது வார்டுக்குட்பட்ட அவினாசிநகருக்கு சென்ற கலெக்டர் அங்கும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அங்கு அரவிந்த்குமார் என்பவருக்கு சொந்தமான காலி இடம் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் கொடுத்து அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர்.
நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
பின்னர் மாவட்ட கலெக்டர் அதிகாரிகளிடம் காலி இடம் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் கொசுப்புழு உற்பத்தியாகும் நிலையில் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் பொதுமக்கள் தங்கள் இடங்களை தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் அசோகன், மாநகர் நல அலுவலர் டாக்டர் ரகுநாத், மாநகராட்சி உதவி கமிஷனர்கள் வாசுக்குமார், செல்வநாயகம், சுகாதார அலுவலர்கள். சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.