நடைபாதை பாலம் கட்டுமான பணியையொட்டி ரத்தாகும் ரெயில்கள் விவரம்
நடைபாதை பாலம் கட்டுமான பணியையொட்டி திருச்சியில் ரத்தாகும் ரெயில்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நடைபாதை பாலம் கட்டுமான பணியின் தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் ரெயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ரெயில் சேவை நேரத்தில் மாற்றம்
வருகிற 23-ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து காலை 8.30 மணிக்கு திருச்சி புறப்படும் (வண்டி எண் 16853) எக்ஸ்பிரஸ் ரெயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஒரு மணிநேரம் தாமதமாக காலை 9.30 மணிக்கு அந்த ரெயில் எழும்பூரில் இருந்து திருச்சிக்கு புறப்படும்.
இதேபோல் வருகிற 23 மற்றும் 27, 28-ந் தேதிகளில் பாலக்காடு டவுன்-திருச்சி (வண்டி எண் 56712) செல்லும் பயணிகள் ரெயில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி ஜங்ஷன் வரை பகுதி தூரம் மட்டும் ரத்து செய்யப்படுகிறது.
ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில்
வருகிற 27, 28-ந் தேதிகளில் ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண் 56844) கோட்டை ரெயில் நிலையம்- திருச்சி ஜங்ஷன் வரையும், கடலூர்-திருச்சி-கடலூர் பயணிகள் ரெயில் (வண்டி எண் 76841/ 76842) ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம்-திருச்சி ஜங்ஷன் வரையும், நாகூர்-திருச்சி -நாகூர் பயணிகள் ரெயில் (வண்டி எண் 76851/ 76852) திருவெறும்பூர்- திருச்சி- திருவெறும்பூர் இடையேயும் ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி-தஞ்சை ரெயில் ரத்து
இதேபோல் 27, 28-ந் தேதிகளில் (வண்டி எண் 16233/ 16234) மயிலாடுதுறை- திருச்சி- மயிலாடுதுறை பயணிகள் ரெயில், (வண்டி எண் 76840, 76839) காரைக்குடி- திருச்சி- காரைக்குடி பயணிகள் ரெயில் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. 28-ந் தேதி திருச்சி-லால்குடி(வண்டி எண் 76800) பயணிகள் ரெயில், திருச்சி-தஞ்சை (வண்டி எண் 76824) பயணிகள் ரெயில், தஞ்சை-திருச்சி (வண்டி எண் 76827)பயணிகள் ரெயில் ஒருநாள் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.