பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் தரிசனம்
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்தசஷ்டி திருவிழா
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. 6 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சூரசம்ஹாரம்
வருகிற 25–ந் தேதி வரை விழா நாட்களில் தினமும் மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜையும், மாலையில் தீபாராதனையும் நடக்கிறது. 25–ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சஷ்டி ஹோமம், மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம், இரவு 7 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
26–ந் தேதி காலை 10 மணிக்கு அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு காட்சி அருளல், இரவு 7 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, 8 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.