பட்டாசு வெடித்து பட்டறையில் தீ விபத்து ரூ.45 லட்சம் பொருட்கள் நாசம்
சின்னாளபட்டியில் பட்டாசு வெடித்த போது பறந்த தீப்பொறி பட்டதில் அச்சு பட்டறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
சின்னாளபட்டி,
சின்னாளபட்டி ஜனதா காலனி காமாட்சி நகரில் சுங்குடி சேலையில் அச்சு பதிக்கும் பட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது. காதர் மொகைதீன் ராஜா என்பவர் இந்த பட்டறையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் பட்டறைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மாலையில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது பட்டாசு வெடித்ததில் பறந்த தீப்பொறி விழுந்ததில் அச்சு பட்டறையில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் பட்டறை முழுவதும் தீ பரவியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதற்கிடையே பட்டறை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.
பொருட்கள் நாசம்
பின்னர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள மற்ற வீடுகளுக்கு தீ பரவாமலும் தடுத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அச்சு பட்டறையில் பற்றிய தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இந்த விபத்தில் பட்டறையில் இருந்த சேலைகள், உபகரணங்கள் என ரூ.45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுமையாக எரிந்து நாசமானதாக காதர் மொகைதீன் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.