ஊத்துக்கோட்டை அருகே கத்திக்குத்து வழக்கில் 3 பேர் கைது

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளமேனி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 21). இவர் கடந்த திங்கட்கிழமை அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் நின்று இருந்தார்.

Update: 2017-10-19 22:30 GMT

ஊத்துக்கோட்டை,

அப்போது அதே பகுதியை சேர்ந்த சரவணன் (22) டிராக்டர் ஓட்டி வந்தார். டிராக்டர் செல்ல வழி விடு என்று சரவணன் கூறினார். இது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.

சிறிது நேரம் கழித்து சரணவன் அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய நண்பர்களான சேதுராமன் (19), மனோஜ்குமார் (20), சதீஷ், அஜித், தீபன் மற்றும் 6 பேருடன் சேர்ந்து நாகராஜ் வீட்டுக்கு சென்றனர். அப்போது நாகராஜின் நண்பர்கள் சதீஷ்குமார் (20), சூர்யா ( 20) ஆகியோர் அங்கு வந்தனர். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆயுதங்களுடன் தாக்கி கொண்டனர். இதில் சதீஷ்குமார் மற்றும் சூர்யாவுக்கு கத்திக்குத்து விழுந்தது.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்த இருவரையும் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து நேற்று சரவணன், சேதுராமன், மனோஜ்குமார் ஆகியோரை கைது செய்தார்.

பின்னர் அவர்களை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார். மேலும் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்