சுரண்டை அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிறுவன் பலி

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலியானான்.

Update: 2017-10-19 21:00 GMT
சுரண்டை,

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலியானான்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்


நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள தன்னூத்து கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி சுலோச்சனா. இவர்களுடைய மகன் அஜய் (வயது 11).

சம்பவத்தன்று முத்துசாமி தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சுரண்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஆனைகுளம் அருகே சென்றபோது அவரது மோட்டார் சைக்கிளும், எதிரே அருணாச்சலபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

சிறுவன் பலி

இதில் அஜய் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். முத்துசாமி, சுலோச்சனா ஆகிய இருவரும் லேசான காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அஜயை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அஜய் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்