நீலகிரி மாவட்டத்தில் பேப்பர் டம்ளர்கள் பயன்படுத்த தடை கலெக்டர் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக பேப்பர் டம்ளர்கள் பயன்படுத்த தடை விதித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ள தாவது:-
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் ஒரு தடவை பயன்படுத்தி விட்டு வீசப்படும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக பேப்பர் டம்ளர்களில் கலந்திருக்கும் மெழுகினால் உடல்நலத்துக்கு ஏற்படும் தீங்கினை தடுக்கும் வகையிலும், அதன் உபயோகத்தை தடுக்கும் பொருட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி திருமண மண்டபங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளை சுற்றி உள்ள கடைகள் உள்பட அனைத்து இடங்களிலும் பேப்பர் டம்ளர்கள் பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
எனவே, பொதுமக்கள் பேப்பர் டம்ளர்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு மாற்றாக எவர்சில்வர் டம்ளர்கள், கண்ணாடி டம்ளர்கள் மற்றும் மண் குடுவைகளை பயன்படுத்த வேண்டும். ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் கடை வியாபாரிகள் பொதுமக்களுக்கு பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதிலாக மேற்கண்ட மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும்.
மேலும் ஓட்டல்களில் சமைக்கப்படும் உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்து விற்பனை செய்ய முழுவதுமாக தடை செய்யப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பேப்பர் டம்ளர்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம், சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.