திருச்சி கல்லணை காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலி
திருச்சி கல்லணை காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆற்றில் மூழ்கிய 2 பேரை தீயணைப்பு படையினர் தேடிவருகின்றனர்.
திருச்சி,
திருச்சி விமான நிலையம் அருகே உள்ளது வள்ளுவர் நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் ஆண்ட்ரூ(வயது19). இவர் கோயம்புத்தூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் தீபாவளி விடுமுறையையொட்டி ஆண்ட்ரூ திருச்சியில் உள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில்(21). இருவரும் நெருங்கிய நண்பர்கள். நேற்று மதியம் இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் சதாம்(24), சிவா(23) உள்பட 12 பேருடன் திருச்சி கல்லணை காவிரி ஆற்றுக்கு சென்றனர்.
பின்னர் நண்பர்கள் அனைவரும் பொன்னிடெல்டா என்ற இடத்தில் ஆற்றில் இறங்கி ஆனந்தமாக குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, உற்சாக மிகுதியில் ஆண்ட்ரூ, இஸ்மாயில், சதாம், சிவா ஆகியோர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர்.
இதில் தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் தத்தளித்தனர். இதனைக்கண்ட அவர்களது நண்பர்கள் அதிர்ச்சியில் சத்தம்போட்டனர். இதற்கிடையே 4 பேரும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கல்லணை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரப்பர் படகு, நீச்சல் வீரர்கள் மூலம் தண்ணீரில் மூழ்கிய 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர தேடுதலுக்கு பின் ஆண்ட்ரூ மற்றும் இஸ்மாயில் ஆகியோரை பிணமாக மீட்டனர். மேலும் சதாம், சிவா ஆகியோரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கல்லணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான ஆண்ட்ரூ, இஸ்மாயில் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.