வாடிப்பட்டி, நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது; 12 பவுன் நகைகள் மீட்பு
வாடிப்பட்டி, நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 12 பவுன் தங்கநகைகளை போலீசார் மீட்டனர்.
சோழவந்தான்,
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தக்குமார், வெங்கடேஷ், முத்துகுமார், காலசேகரன் மற்றும் போலீசார் மேலக்கால் வைகை ஆற்றுப்பாலத்தில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான 3 பேர் நின்றுகொண்டு இருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் குருவித்துறையை சேர்ந்த கண்ணன் (வயது 34), சங்கர் (28). மதுரை எல்லீஸ் நகர் செந்தில் என்ற செந்தில்குமார் (30) என்பது தெரியவந்தது. அவர்கள் மூவரும் சோழவந்தான், வாடிப்பட்டி நாகமலைபுதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சமீபத்தில் சோழவந்தான் போக்குவரத்து பணிமனை அருகே சிகரெட் சில்லறை விற்பனையாளரிடம் ரொக்கப்பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை கொள்ளையடித்து சென்றதும் அவர்கள் தான் என்பதும் தெரிந்தது. அதைதொடர்ந்து கண்ணன், சங்கர், செந்தில் என்ற செந்தில்குமார் ஆகிய மூன்று கொள்ளையர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.