டெங்குவை பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தியா? வீடுகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
டெங்குவை பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகிறதா? என வீடுகளுக்கு நேரில் சென்று கலெக்டர் டி.ஜி.வினய் திடீர் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பீதி அதிகரித்து உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, மர்ம காய்ச்சலுக்கு இங்கு பலரும் பலியாகி உள்ளனர். இதனால், காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. கலெக்டரும், டெங்கு ஒழிப்பு பணிக்காக திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலையில் சீலப்பாடி ஊராட்சி மல்லிகை நகர், கருவூல அலுவலர்கள் காலனி, டேவிட் நகர் பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற கலெக்டர் டி.ஜி.வினய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, தரைமட்ட தொட்டிகள், மேல்நிலை தொட்டிகளில் சேமித்து வைத்திருக்கும் தண்ணீரில் டெங்குவை பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி உள்ளதா? என்பதை அவர் ஆய்வு செய்தார். மேலும், கொசுப்புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு அவர் விளக்கம் அளித்தார்.
அப்போது, ‘தேவையற்ற பொருட்கள், பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் கண்ணாடி பாட்டில் கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் இருக்க, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், குளிர்சாதனபெட்டியின் பின்புறம் தேங்கும் தண்ணீரை தினமும் அகற்ற வேண்டும்’ என பொதுமக்களிடம் அவர் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் அவர் ஆய்வு செய்தார். அங்குள்ள பழைய டயர்களை உடனே அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். இதே போல, திண்டுக்கல்- பழனி ரோட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கருப்பையா, வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் ஹேமா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.