மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது 15 வாகனங்கள் பறிமுதல்
முக்கொம்பு சுற்றுலா மையத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது 15 வாகனங்கள் பறிமுதல்
ஜீயபுரம்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கோப்பு பாலத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஓட்டி வந்தது, திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் கோப்பு கிராமத்தை சேர்ந்த சண்முகம் (வயது 27), கரூர் மாவட்டம் கவண்டம்பட்டி அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்த பாலமுருகன்(24) என்பதும், இவர்கள் இருவரும் முக்கொம்பு சுற்றுலா மையத்தில் பல மோட்டார் சைக்கிள் களை திருடியதும் தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், 15 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.