டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதுபார்த்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

மேச்சேரி அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரிபார்த்த ஊழியர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இறந்தார்.

Update: 2017-10-16 22:45 GMT
மேச்சேரி,

மேச்சேரி அருகே மல்லிகுந்தம் ஊராட்சி கூத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சத்தியன் (வயது 41). இவர் மேச்சேரி கிழக்குபிரிவு மின்வாரிய அலுவலகத்தில் களப்பணியாளராக 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 9.50 மணியளவில் மேச்சேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சத்தியன் மீது மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்த சத்தியனை, ஆம்புலன்ஸ் முலம் சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சத்தியன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து சத்தியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்்து போன சத்தியனுக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

மேலும் செய்திகள்