டெங்கு காய்ச்சலால் இதுவரை 3 பேர் மட்டுமே இறந்துள்ளனர் கண்காணிப்பு அதிகாரி தகவல்
திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் மட்டுமே இறந்துள்ளனர் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி டாக்டர் கோபால் தெரிவித்தார்.
திருப்பூர்,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகளை மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். சாதாரண காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியை ஆய்வு செய்ய நேற்று காலை திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி டாக்டர் கோபால் வந்தார். பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தங்கியிருக்கும் வார்டுகளை சென்று பார்வையிட்டார்.
அவர்களின் உடல்நிலை குறித்தும், அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், அங்கு சுகாதாரத்தின் நிலை குறித்தும் கேட்டறிந்தார். மேலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றியுள்ள புதர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று டாக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி ஆகியோரும் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட முழுவதும் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு சிலருக்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு திருப்பூர் ஆஸ்பத்திரியில் இருந்து டெங்கு சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பலனின்றி இதுவரை 3 பேர் மட்டுமே இறந்துள்ளனர். மேலும், காய்ச்சல் அதிகம் தாக்கம் உள்ள பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்கிறோம். அங்கு சுகாதார சீர் கேடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப் படும். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டால் மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.