மும்பையில் 5 நாள் தீபாவளி கொண்டாட்டம் இன்று கோலாகலமாக தொடங்குகிறது

மும்பையில் தீபாவளி பண்டிகை 5 நாள் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் முதல் நாள் பண்டிகையான தந்தராஸ் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

Update: 2017-10-16 23:45 GMT

மும்பை,

இந்த நாள் நகைகள், வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க உகந்தநாள் என கருதப்படுகிறது. இதன் காரணமாக நகைகள் உள்ளிட்ட மேற்கண்ட பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

நாளை (புதன்கிழமை) நரகசதுர்த்தசி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முக்கிய நிகழ்வான பெரிய தீபாவளி எனப்படும் லெட்சுமி பூஜையும், வருகிற 20–ந் தேதி கோவர்த்தண பூஜையும், 21–ந்தேதி பாவ்–பீஜ் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி மும்பைவாசிகள் பலர் தங்கள் வீடுகளிலேயே இனிப்பு பண்டங்களை தயார் செய்வதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். வீடுகளில் பெண்கள் குழுவாக அமர்ந்து இந்த பண்டங்களை தயார் செய்ததை காண முடிந்தது.

தீபாவளி ஷாப்பிங் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் நேற்று தாதர், பாந்திரா, சி.எஸ்.டி., குர்லா, சர்ச்கேட், காட்கோபர் உள்ளிட்ட மும்பையின் அனைத்து பகுதிகளிலும் தீபாவளி விற்பனை ஜோராக நடந்தது.

அங்கு மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள், பூஜை பொருட்கள், கலர் கோலப்பொடிகள், அகல்விளக்குகள், அலங்கார விளக்குகள், இனிப்பு பதார்த்தங்கள் ஆகியவற்றை வாங்கிச்சென்றனர்.

மேலும் செய்திகள்