திருமணம் செய்து கொள்ளாமல் டிரைவருடன் வசித்து வந்த பெண் கொலை
திருமணம் செய்து கொள்ளாமல் டிரைவருடன் வசித்து வந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பூட்டிய வீட்டில் அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
புனே,
சோலாப்பூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது37). டிரைவர். ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர். இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண்ணுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
இந்தநிலையில், சுரேஷ் புனேயை சேர்ந்த மீனா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் லோகேகாவ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சமீபகாலமாக மீனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவருடன் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில், அவர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்து சகிக்க முடியாத அளவிற்கு தூர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னலை திறந்து பார்த்தபோது, மீனா பிணமாக கிடந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மீனா தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்தநிலையில், சுரேஷ் தலைமறைவாகி விட்டதால், அவர் தான் நடத்தையில் சந்தேகப்பட்டு மீனாவை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். எனவே போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.