வியாசர்பாடியில் வாலிபரை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கைது

வியாசர்பாடியில் வாலிபரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கட்டிலில் இருந்து விழுந்து இறந்ததாக நாடாகமடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-10-16 23:45 GMT
பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், எம்.ஜி.ஆர். நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 30). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்துவந்தார். இவருக்கு சாவித்திரி (28) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சாவித்திரி சென்னை தங்கசாலையில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார்.

சிவபெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 13-ந் தேதி காலை 10 மணியளவில் சிவபெருமாள் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டதாக கூறி அவரை சாவித்திரி ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிவபெருமாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி எம்.கே.பி.நகர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் முதலில் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து, சாவித்திரியிடம் விசாரித்து வந்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. தீவிரமாக விசாரித்ததில் சிவபெருமாளை சாவித்திரியே கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

உடனே எம்.கே.பி.நகர் போலீஸ் உதவி கமிஷனர் அன்பழகன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பிரகாஷ் இதனை கொலை வழக்காக மாற்றி னார். போலீசாரிடம் சாவித்திரி அளித்த வாக்குமூலத்தில், சிவபெருமாள் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துவந்ததாலும், தன் மீது சந்தேகப்பட்டதாலும் ஆத்திரமடைந்து குடிபோதையில் இருந்த அவரை கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்