மதுரையில் நேற்று டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலி

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று 6 மாத குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2017-10-15 22:42 GMT
மதுரை,

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தினமும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது. மதுரையிலும் டெங்கு காய்ச்சலுக்கு பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றும் 6 மாத குழந்தை உள்பட 2 பேர் பலியாயினர். அதன் விவரம் வருமாறு:-

மதுரை மதிச்சியம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுபாஷ். யோகா மாஸ்டர். இவரது மனைவி கார்த்திகா (வயது29). இவர்களுக்கு திருமணமாகி தனுஷ் என்ற 6 மாத ஆண் குழந்தை உள்ளது. கார்த்திகாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாகவும் அதற்காக அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டதில் டெங்கு அறிகுறி இருந்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பாப்பம்பட்டியை சேர்ந்த மாணிக்கம். என்பவரது 6 மாத ஆண் குழந்தை ஹர்சனுக்கு தொடர் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே ஹர்சன் உயிரிழந்தான்.

மேலும் செய்திகள்