கொட்டாரத்தில் கால்வாயில் வெள்ளபெருக்கு சாலை உடைந்ததால் போக்குவரத்து துண்டிப்பு

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் இந்த மழை நீடித்ததால் கொட்டாரம் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நாஞ்சில் நாடு புத்துணர்வு கால்வாயில் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது

Update: 2017-10-15 22:45 GMT

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் இந்த மழை நீடித்ததால் கொட்டாரம் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நாஞ்சில் நாடு புத்துணர்வு கால்வாயில் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கொட்டாரத்தில் இந்த கால்வாய் மேட்டுகால்வாய், பள்ளக்கால்வாய் என இரண்டாக பிரிந்து செல்கிறது. இதில் பள்ளக்கால்வாய் கொட்டாரம் அரசு ஆஸ்பத்திரியின் பின் பகுதியிலிருந்து கன்னியாகுமரி குமரிசால் குளம் வரை செல்கிறது. நேற்று காலை முதல் இந்த கால்வாயில் அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொட்டாரத்தில் இருந்து நாடான்குளம், ராமன்புதூர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலையில் நீர் கசிவு ஏற்பட்டு அருகில் நின்ற மரங்களுடன் வயல்பகுதியில் உடைந்து விழுந்தது. இதனால் அந்த சாலையின் வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலைஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அந்தவழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது.

மேலும் செய்திகள்