மல்யுத்தத் தாய்
நீத்து சர்க்கார், 13 வயதில் 43 வயதானவருக்கு குழந்தை திருமணம் என்ற போர்வையில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறார்.
நீத்து சர்க்கார், 13 வயதில் 43 வயதானவருக்கு குழந்தை திருமணம் என்ற போர்வையில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறார். மூன்றே நாளில் அந்த நபரிடம் இருந்து தப்பித்து வீட்டிற்கு ஓடோடி வந்திருக்கிறார். உடனே அவருடைய பெற்றோர் கட்டாயப்படுத்தி வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அதனால் 14 வயதிலேயே இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகிவிட்டார்.
இரண்டாவது கணவர் சஞ்சய் நிரந்தர வேலையின்றி இருந்திருக்கிறார். அவருடைய அம்மாவின் ஓய்வூதியம்தான் குடும்ப வருமானமாக இருந்திருக்கிறது. குடும்ப செலவுகளை சமாளிக்க நீத்து கட்டிட வேலைக்கு சென்றிருக்கிறார்.
நீத்து, அரியானா மாநிலத்திலுள்ள பிவானி என்ற பகுதியை சேர்ந்தவர். 7-ம் வகுப்பு வரையே அவரால் படிக்க முடிந்திருக்கிறது. சிறுவயதிலேயே மல்யுத்த வீராங்கனையாக வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருந்திருக்கிறது.
“நான் மல்யுத்த பயிற்சி மேற்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் என் பெற்றோர் குடும்ப பொருளாதாரத்தை காரணங்காட்டி இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை என்று கூறினார்கள். நானும் அதுவரை காத்திருக்கலாம் என்று நினைத்தேன். அதற்குள் அவசர அவசரமாக திரு மணம் செய்து வைத்துவிட்டார்கள்” என்கிறார், நீத்து.
திருமணமாகி குழந்தைகளை பெற்றெடுத்த பிறகும் நீத்து, மல்யுத்த கனவிலே இருந்திருக்கிறார். 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இடம்பெற்ற மல்யுத்த போட்டி நீத்துவின் மனதில் தீராத வேட்கையை உருவாக்கியிருக்கிறது. அவருடைய கணவரும் நீத்துவின் விருப்பத்திற்கு செவி சாய்த்திருக்கிறார். இதையடுத்து அங்கு உள்ளூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மல்யுத்த பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
அப்போது நீத்து அதிக உடல் எடையுடன் காணப்பட்டிருக்கிறார். முதலில் உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து பத்து கிலோ மீட்டர் தூரம் ஓடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.
“எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் ஐந்து மணிக்குத்தான் விழிப்பார்கள். நான் அவர்களுக்கு முன்பாக மூன்று மணிக்கே எழுந்து ஓட்டப்பயிற்சிக்கு சென்றுவிடுவேன். எல்லோரும் விழிப்பதற்குள் நான் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிவிடுவேன். மற்றவர்கள் பார்க்காத அளவுக்கு என் பயிற்சி அமையவேண்டும் என்று விரும்பினேன்” என்கிறார்.
நீத்து உடல் எடையை குறைத்த பிறகு கணவரின் துணையோடு ரோடாக்கில் உள்ள ஸ்டேடியத்திற்கு பயிற்சி பெற சென்றிருக்கிறார். அப்போதும் அதிகாலையில் 3 மணிக்கு எழுந்து ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து ஸ்டேடியத்திற்கு சென்று பயிற்சி எடுத் திருக்கிறார். ஆரம்ப நாட்களில் நீத்து தினமும் 17 மணி நேரம் பயிற்சி எடுத்திருக்கிறார். இரவு 9 மணிக்கு பிறகுதான் வீடு திரும்பி இருக்கிறார். தீவிர பயிற்சிக்கு பிறகு 2013-ம் ஆண்டு மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றிருக் கிறார். முதலில் அவருக்கு தனது திறமை மீதே சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அவரது பயிற்சியாளர், புகழ் பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை சுட்டிக்காட்டி ஊக்கப்படுத்தியிருக் கிறார்.
“இரண்டு குழந்தைகளின் தாயான என்னால் இளம் வயதான எதிராளிகளிடம் போட்டியிட முடியுமா? என்ற தயக்கம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. என் பயிற்சியாளர் மேரி கோமின் வாழ்க்கை கதையை என்னிடம் சொன்னார். அதனை அறிந்ததும் அவரால் முடியுமானால் என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் எழுந்தது” என்கிறார்.
நீத்து 2014-ல் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். அடுத்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.