பாந்திரா - ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவர் வக்கீல்

பாந்திரா - ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவர் குஜராத்தை சேர்ந்த வக்கீல் என்பது தெரியவந்து உள்ளது.

Update: 2017-10-14 22:52 GMT
மும்பை,

மும்பை பாந்திரா - ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு டாக்சியில் சென்று கொண்டிருந்த ஒருவர் திடீரென டிரைவரிடம் டாக்சியை நிறுத்த சொல்லி விட்டு கீழே இறங்கி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் மறுநாள் மீட்கப்பட்டது. சம்பவம் குறித்து ஒர்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இருப்பினும் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியாமல் இருந்தது.

வக்கீல்

தற்கொலை செய்து கொண்ட நபர் டாக்சியில் பயணம் செய்த போது, டிரைவரின் செல்போனை வாங்கி அவரது மனைவிக்கு போன் செய்து இருக்கிறார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் அமித் ஷா என்பவர் டாக்சி டிரைவருக்கு போன் செய்து பேசினார்.

அவர் தற்கொலை செய்து கொண்டவரின் சகோதரர் என்பது தெரியவந்தது. டாக்சி டிரைவர் நடந்த சம்பவங்களை அவரிடம் கூறினார்.

அப்போது தற்கொலை செய்து கொண்டவர் குஜராத் மாநிலம் ஆமாதாபாத்தை சேர்ந்த வக்கீல் பாவேஷ் ராஜேந்திர ஷா (வயது52) என்பது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அமித் ஷா மும்பை வந்தார். அவரிடம் பாவேஷ் ராஜேந்திர ஷாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்