வியாசர்பாடியில் தீபாவளி மாமூல் வசூலித்த ரவுடிகள் 2 பேர் கைது

வியாசர்பாடியில் தீபாவளி மாமூல் வசூலித்த ரவுடிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-10-14 22:45 GMT
பெரம்பூர், 

வியாசர்பாடி பகுதியில் 2 ரவுடிகள் கத்தியை காட்டி மிரட்டி கடைகளில் தீபாவளி மாமூல் பணம் வசூலிப்பதாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

போலீசை கண்டதும் ரவுடிகள் தப்பிஓட முயற்சித்தனர். அவர்களை போலீசார் விரட்டிப்பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில், பிடிபட்டவர்கள் அப்பாஸ் என்பவரது மகன் சிராஜூதீன் (வயது 19), வெங்கடேசனின் மகன் மணிகண்டன் (21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் பிரபல ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்