நாய்குட்டியை மடியில் வைத்து உணவு ஊட்டிய குரங்கு தலையை வருடி பாசத்தை காட்டியது
கோவை அருகே நாய் குட்டியை மடியில் வைத்து உணவு ஊட்டிய குரங்கை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
இடிகரை,
அவசரமான இந்த காலக்கட்டத்தில் மனிதாபிமானம் வெகுவாக குறைந்து வருகிறது. இப்போது எல்லாம் விபத்து எதுவும் நடந்து விட்டால் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதில் ஒரு சிலரே முன் வருகிறார்கள். பலர் அதை கண்டும், காணாமலும் சென்று விடுகிறார்கள்.
விலங்குகள் என்றாலே ஒன்றொடு ஒன்று மோதிக்கொள்ளும். ஆனால் இங்கே.. பசிக்காக தவித்த ஒரு நாய்குட்டியை தன் குட்டி போல் அரவணைத்து ரொட்டியை புகட்டிய ஒரு குரங்கு தாயான நெகிழ்ச்சியான சம்பவம் கோவை அருகே நடந்தது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இதன் எதிரே ஏராளமான புளியமரங்கள் உள்ளன. இந்த மரத்துக்கு அவ்வப்போது மலைப்பகுதிகளில் இருந்து குரங்குகள் வந்து செல்லும். அதே போல் நேற்றும் குரங்குகள் அதிகளவில் வந்தன. அப்போது மரக்கிளையில் குரங்குகள் விளையாடி கொண்டு இருந்தன.
அந்த நேரத்தில் புளியமரத்தின் கீழே ஒரு நாய்குட்டி குளிரில் நடுங்கியப்படி தவித்து கொண்டு இருந்தது. பசியால் குரைத்தது. இதை நீண்ட நேரமாக பார்த்து ஒரு குரங்கு திடீரென மரத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கியது. பின்னர் நாய்குட்டியை தூக்கி கொண்டு அதே வேகத்தில் மரத்துக்கு சென்றது. பின்னர் அந்த நாய்குட்டியை தனது மடியில் வைத்து தடவி கொடுத்தது. மேலும் நாயின் தலை மற்றும் உடலில் தட்டி கொடுத்து அரவணைத்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பின்னர் அவர்கள் ரொட்டி வாங்கி கீழே போட்டனர். அப்போது நாய்குட்டியை பி.எஸ்.என்.எல். அலுவலக போர்டின் மேல் பத்திரமாக வைத்து விட்டு குரங்கு கீழே இறங்கி ரொட்டியை எடுத்து சென்றது. தொடர்ந்து நாய்குட்டியை பத்திரமாக தூக்கி கொண்டு மரத்தின் கிளைக்கு சென்று தனது மடியில் வைத்து அதற்கு ரொட்டியை ஊட்டியது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பலரும் செல்போனில் படம் பிடித்தனர். தொடர்ந்து நாய்குட்டி குரங்கின் அரவணைப்பிலேயே இருந்து வருகிறது. குரங்கின் இந்த தாய்மை குணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
விலங்குகள் என்றால் மோதல் தான் இருக்கும் என்ற நிலையை மாற்றி எங்களுக்கும் பாசம் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் குரங்கு, நாய்குட்டியை அரவணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.