மூளைச்சாவு அடைந்த மேலூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
மதுரையில் மூளைச்சாவு அடைந்த மேலூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த பிச்சை மகன் அழகுமணிகண்டன் (வயது 18). இவர் திருப்பூர் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலூருக்கு வந்தார். இந்த நிலையில், 9-ந்தேதி தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அண்ணாநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து மருத்துவமனையின் மூளை நரம்பியல் மருத்துவர் பரிந்துரைப்படி மூளை செயல்பாடுகளுக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன் முடிவில் மூளை நிரந்தரமாக செயல் இழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். மூளை செயல் இழந்து இருந்தாலும் மற்ற பாகங்களான சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், கண்கள் ஆகியவை நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருந்தன.
மூளைச்சாவு அடைந்த அழகு மணிகண்டனால் உயிருக்கு போராடும் சில நோயாளிகளை காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் அவருடைய தந்தை பிச்சையிடம் எடுத்துரைத்தனர்.
தன் மகன் இறந்து விட்டாலும், அவர் 7 பேரின் உடல்களில் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதை உணர்ந்த பிச்சை, மகனின் உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து தொலைபேசி, பேக்ஸ் மூலம் அரசிடம் அனுமதி கோரப்பட்டதன் பேரில், 2 மணி நேரத்திற்குள் தமிழக அரசு சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளித்தது.
அதைத்தொடர்ந்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் தலைமையில், அழகுமணிகண்டனின் உறுப்பு தானத்திற்காக சுமார் 5 மணி நேர அறுவை சிகிச்சை நடைபெற்றது.
ஒரு சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை அகற்றப்பட்டு மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வெவ்வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னை போர்ட்டிஸ் மருத்துவமனைக்கும், இதயம் சென்னை குளோபல் மருத்துவமனைக்கும், கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டன.
இதன் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இந்த உடல் உறுப்புகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன.