மானாமதுரை வாரச்சந்தை கடைகள் ஏலம் விடுவதில் தொடரும் இழுபறி
போட்டி, ரத்து போன்ற பிரச்சினைகளால் மானாமதுரை வாரச்சந்தை கடைகள் ஏலம் விடுவதில் தொடர்ந்து இழுபறி நிலை இருந்து வருகிறது.
மானாமதுரை,
போட்டி, ரத்து போன்ற பிரச்சினைகளால் மானாமதுரை வாரச்சந்தை கடைகள் ஏலம் விடுவதில் தொடர்ந்து இழுபறி நிலை இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளியாக ஏலத்தை ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மானாமதுரையில் வாரத்தில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. மானாமதுரையைச் சுற்றிலும் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வாரச்சந்தையில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்வது வழக்கம், மானாமதுரை பகுதியில் கடந்த சில வருடங்களாக போதிய விளைச்சல் இல்லாததால் கிராமமக்கள் பலரும் தங்களது தேவைகளுக்கு வாரச்சந்தையை நம்பியே உள்ளனர். மானாமதுரை வாரச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். தற்காலிக கடைகள், நிரந்தர கடைகள் ஆகியவற்றிற்கு 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.
பேரூராட்சி சார்பில் கட்டண விவரம் வைக்கப்பட்டாலும், கடைகளை ஏலம் எடுத்தவர் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை என்பது பொது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு வாரச்சந்தை ரூ.27 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏலம் நடைபெறும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே நபருக்கு ஏல தொகையில் 5 சதவீதம் வைத்து வழங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்க முடியாது என்பதால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. இதில் ரூ.67 லட்சம் வரை ஏலம் கேட்டனர். ஆனால் ஒருசில காரணங்களால் ஏலம் ரத்து செய்யப்பட்டது. தற்போது பேரூராட்சி சார்பில் வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி மீண்டும் ஏலம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதுவும் சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஏலம் விடுவதில் இழுபறி இருந்து வருகிறது. தற்போது மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) ஏலம் நடைபெற உள்ளது. இதில் பலரும் சிண்டிகேட் அமைத்து குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மானாமதுரை பகுதி வியாபாரிகள் கருதுகின்றனர். மேலும் அதிக தொகைக்கு ஏலம் சென்றாலும் அதை பேரூராட்சி நிர்வாகம் ரத்து செய்யக்கூடாது. ஏனென்றால் வியாபாரிகள் தங்களுக்கு கட்டுபடியானால் தான், சந்தை கடைக்கு வருவார்கள். இல்லையெனில் வேறு பகுதிக்கு சென்றுவிடுவார்கள். எனவே மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு பேரூராட்சியே வாரச்சந்தை கடை வாடகையை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது ஆன்லைன் மூலம் ஏலத்தை நடத்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.