கள்ளக்குறிச்சியில் கோவில் முன்பு கோலம் போட்ட இளம்பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
கள்ளக்குறிச்சியில் கோவில் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கே.கே.நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். மரக்கடை உரிமையாளர். இவரது மனைவி வசந்தி (வயது 28). இவர் நேற்று அதிகாலை வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோவில் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்தபடி ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், கோலம் போட்டுக் கொண்டிருந்த வசந்தியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தி இதுபற்றி கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு உடனே தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வசந்தி தினந்தோறும் அதிகாலை நேரத்தில் கோவில் முன்பு கோலம் போடுவதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஹெல்மெட் அணிந்து வந்து ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் கள்ளக்குறிச்சி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.