தனியார் தொழிற்சாலையில் 60 கிலோ அலுமினிய தகடுகள் திருடிய வாலிபர் கைது

தனியார் தொழிற்சாலையில் 60 கிலோ அலுமினிய தகடுகள் திருடிய வாலிபர் கைது

Update: 2017-10-12 22:15 GMT

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் சிப்காட் பகுதியில் மூடப்பட்ட தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள சுற்றுச்சுவர் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதை அறிந்த சிப்காட் பகுதி திட்ட அலுவலர் தமிழ்ச்செல்வி சக ஊழியர்களுடன் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் அலுமினிய தகடுகளை திருடிக்கொண்டிருந்தார். உடன் அவரை ஊழியர்கள் கையும், களவுமாக பிடித்து கடலூர் முதுநகர் போலீசில் ஒப்படைத்தனர். அதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பச்சையாங்குப்பம் செல்வராஜ் மகன் வீரமணிகண்டன் (வயது 32) என்று தெரிய வந்தது. அவர் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 60 கிலோ அலுமினிய தகடுகளை திருடி வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து வீரமணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்