கொள்ளையடிக்க திட்டமிட்ட 2 பேர் கைது 3 பேருக்கு வலைவீச்சு

பட்டுக்கோட்டை அருகே காரில் வந்து கொள்ளையடிக்க திட்டமிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2017-10-11 22:15 GMT
பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாந்தாங்காடு கிராமத்தில் சம்பவத்தன்று இரவு பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சாந்தாங்காடு காளியம்மன் கோவில் அருகே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதைக் கண்ட போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கார் அருகே 5 பேர் அமர்ந்திருந்தனர். போலீசாரை கண்டதும் 3 பேர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த யாகப்பன் மகன் அருள்பீட்டர் (வயது23), ஜோசப் மகன் அருள்தாஸ் (33) என்றும் அவர்கள் அப்பகுதியில் கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அருள்பீட்டர், அருள்தாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆசைராஜ், மன்னார் மற்றும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்