குடிநீர் வழங்க கோரி விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் வழங்க கோரி விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்.
விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் உள்ள 2 வீதிகளில் இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. மேலும் குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள தெருக்களுக்கு சென்றும், விளை நிலங்களுக்கு சென்றும் தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தினர். இந்நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குடி நீருக்காக காலி குடங்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள தெருக்களுக்கு சென்றனர்.
முற்றுகை போராட்டம்
அப்போது அங்கு வசிக்கும் மக்கள் எங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இங்கு ஏன் தண்ணீர் பிடிக்க வருகிறீர்கள் என கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தண்ணீர் பிடிக்க வந்த மக்கள் காலி குடங்களுடன், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் தலைமையில் விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை இல்லை
அப்போது அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினார். பின்னர் பொதுமக்கள் தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவிடம் மனு கொடுத்தனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா, ஏன் போராட்டம் நடத்த வந்தீர்கள். என்னிடம் கூறினால் பிரச்சினை தீர்ந்திருக்கும் என்று கூறினார். அதற்கு பொதுமக்கள் நாங்கள் பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர்.
வாக்குவாதம்
இதனால் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவிற்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த விருத்தாசலம் போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் கடலூர்- விருத்தாசலம் சாலையில் போராட்டம் நடத்துவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.