உளுந்தூர்பேட்டை அருகே புதுப்பெண் அடித்து கொலை?
உளுந்தூர்பேட்டை அருகே புதுப்பெண் மர்மமான முறையில் இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கணவரின் வீட்டை சூறையாடினர்.
விழுப்புரம்,
அந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வானம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்திமுருகன் (வயது 30). வக்கீல். இவருக்கும் கடலூர் மாவட்டம் நெய்வேலி காப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகள் விமலாதேவி (22) என்பவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
பி.ஏ. பட்டதாரியான விமலாதேவியும், சக்திமுருகனும் திருமணத்திற்கு பிறகு உறவுக்காரர்கள் வீடுகளுக்கு விருந்திற்காக சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் விமலாதேவிக்கு தாலிபிரித்து கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உறவினர்கள் பலர் கலந்து கொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினர்.
இந்த நிலையில், காப்பாங்குளத்தில் உள்ள வெங்கடேசனுக்கு நேற்று செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், விமலாதேவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக உள்ளார், உடனே வாருங்கள் என்று கூறினார்.
இதில் பதறியடித்து கொண்டு வெங்கடேசன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வானம்பட்டு கிராமத்தில் உள்ள சக்திமுருகன் வீட்டிற்கு சென்ற னர். அங்கு வீட்டில் யாரும் இல்லை. மேலும், அங்கு விமலாதேவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், விமலாதேவின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த விமலாதேவின் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர், சக்திமுருகன் வீட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆத்திரமடைந்து சக்திமுருகனின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாரிடம் விமலாதேவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் விமலாதேவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு வீட்டில் இருந்து சக்திமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தப்பிச்சென்றனர் என முறையிட்டனர்.
இதை கேட்ட போலீசார், உறவினர்களை சமாதானப்படுத்தி இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை உறவினர்கள் ஏற்றனர்.
பின்னர் மர்மமான முறையில் இறந்த விமலாதேவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விமலாதேவி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 40 நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.