பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் மீதான வழக்கு: அடுத்த மாதம் 7-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் மீதான வழக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Update: 2017-10-11 00:43 GMT
கரூர்,

கரூர் வெங்கமேட்டில் மாவோயிஸ்டுகள் சந்திரா, கலா ஆகியோரை கியூ பிரிவு போலீசார் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்தனர்.

மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக வக்கீல் முருகன் என்பவரும் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதில் சந்திரா, கலா ஆகியோர் திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வக்கீல் முருகன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் மீதான வழக்கு கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தள்ளிவைப்பு

வழக்கின் விசாரணைக்காக மாவோயிஸ்டுகள் சந்திரா, கலா, வக்கீல் முருகன் ஆகியோர் திருச்சியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரூர் கோர்ட்டிற்கு நேற்று பகல் 12 மணி அளவில் அழைத்து வரப்பட்டனர். மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து வழக்கை அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

மேலும் அதுவரை 3 பேருக்கும் நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்தார். இதையடுத்து 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் மீண்டும் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

மேலும் செய்திகள்