நாகர்கோவில் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஜயகுமார் எம்.பி. ஆய்வு

நாகர்கோவில் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஜயகுமார் எம்.பி. ஆய்வு செய்தார்.

Update: 2017-10-10 22:45 GMT

நாகர்கோவில்,

முக்கடல் அணை தண்ணீர் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு குழாய்கள் மூலமாக கொண்டு வரப்பட்டு சுத்திகரிப்பு செய்து, பின்னர் நாகர்கோவில் நகருக்கு வினியோகிக்கப்படுகிறது. தற்போது டெங்கு பரவும் சூழ்நிலையில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுகிறதா? டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகாமல் இருக்கிறதா? என விஜயகுமார் எம்.பி. நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் நகராட்சி என்ஜினீயர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

பின்னர் நாகர்கோவில் வடசேரி முதல் கோட்டார் சவேரியார் பேராலயம் வரை நடைபெறும் சாலை சீரமைப்பு பணியை மணிமேடை சந்திப்பு பகுதியில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–

பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் குமரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இல்லை. சுகாதாரத்துறையினர் தனிக்கவனம் செலுத்தி, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சப்–டிவி‌ஷனுக்கு உட்பட்ட பகுதியில் சாலை சீரமைப்புக்காக ரூ.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.40 கோடி கேட்டுள்ளோம். அந்த நிதியும் வந்து விட்டால குமரி மாவட்டத்தில் சாலை வசதி தன்னிறைவு பெற்று விடும்.

நாகர்கோவில் நகரின் உள்புற தெருச்சாலைகளை சீரமைக்க ரூ.9 கோடி கேட்டுள்ளோம். அதில் ரூ.4 கோடி கிடைத்துள்ளது. மீதமுள்ள தொகையும் வந்தால் நாகர்கோவில் நகரச்சாலைகளும் சீராகிவிடும்.

இவ்வாறு விஜயகுமார் எம்.பி. கூறினார்.

ஆய்வில், குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், நகர செயலாளர் சந்திரன், கனகராஜன், ஆனந்த், கிப்சன், ரெயிலடி மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்