கோவை கணபதியில் கன்டெய்னர் லாரி உரசியதால் மின்மாற்றி வெடித்து சிதறியது
கோவை கணபதியில் கன்டெய்னர் லாரி உரசியதால் மின்மாற்றி வெடித்து சிதறியது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கணபதி,
கோவை கணபதி- சங்கனூர் ரோட்டில் ஒரு மின்மாற்றி உள்ளது. நேற்று காலை 7 மணியளவில் அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, மின்மாற்றியின் மீது லேசாக உரசியது. இதனால் அந்த மின்மாற்றி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி, தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், கணபதி மின்சார வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் உதவி மின்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து மாவட்ட தலைமை அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அந்த மின்மாற்றிக்கு வரும் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்து வந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி ராமச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர், தீ அணைக்கப்பட்டது.
இந்த விபத்தில் மின்மாற்றி பலத்த சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தர்மலிங்கம், முபாரக் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் வெடித்து சிதறிய மின்மாற்றியின் அருகில் புதிய மின்மாற்றி அமைக்க உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து புதிய மின்மாற்றி அமைக்கும் பணியை ஊழியர்கள் தொடங்கினர்.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகையில், விபத்து ஏற்பட்டவுடன் பொதுமக்கள் எங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததால் அசம்பாவிதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது. இதில் சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.4¼ லட்சம் ஆகும். விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி உரிமையாளர் மீது வழக்கு தொடரப் படும் என்றனர்.