டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

தகவல் தொடர்பு நிறுவனத்தில் பட்டதாரி என்ஜினீயர்கள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2017-10-09 09:45 GMT
தகவல் தொடர்பு ஆலோசகர்கள் கழக நிறுவனம் சுருக்கமாக டி.சி.ஐ.எல். என அழைக்கப்படுகிறது. மத்திய பயிற்சிப் பணியாளர் துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது பொறியாளர், ஜூனியர் பொறியாளர் பணியிடங்களுக்கு 100 பேரும், கார்பெண்டர் உள்ளிட்ட திறன் பணியாளர், திறன்சாரா பணியாள் வேலைக்கு 110 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 210 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

லேபர் , மாசன் கார்பெண்டர் உள்ளிட்ட பணிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியும், பணி சார்ந்த அனுபவமும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். டிரைவர் பணிக்கு 10-ம் வகுப்பு படித்து டிரைவிங் லைசென்சு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியாள் - திறன் பணியாள் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரித்து, தேவையான சான்றுகளை சான்றொப்பம் செய்து இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் புதுடெல்லியில் உள்ள டி.சி.ஐ.எல். நிறுவன இயக்குனர் அலுவலகத்தை அடையும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் 15-10-2017-ந் தேதியாகும்.

என்ஜினீயர்களுக்கு பணிகள்...

என்ஜினீயர், இளநிலை என்ஜினீயர் பணிக்கு தலா 50 இடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு 1-9-2017-ந் தேதியில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. என்ஜினீயரிங் போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக். படித்தவர்கள் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் இளநிலை என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 12-10-2017-ந் தேதிக்குள் புதுடெல்லி, டி.சி.ஐ.எல். நிறுவனத்தை சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.

இது பற்றிய விவரங்களை www.tcil.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்