கொல்லிமலையில் விபத்து: மலைப்பாதை தடுப்பு சுவரில் தொங்கிய மினிலாரி டிரைவர் உயிர் தப்பினார்

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சேலூர்நாடு ஊர்முடி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 32), டிரைவர்.

Update: 2017-10-09 09:00 GMT
கொல்லிமலை,

இவர் சேலத்தில் இருந்து ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளை ஏற்றிக்கொண்டு மினிலாரியில் கொல்லிமலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 34-வது கொண்டை ஊசி வளைவில் வேகமாக திரும்பும்போது மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்து தடுப்பை உடைத்துக்கொண்டு தொங்கியது.

அப்போது சுதாரித்த டிரைவர் குப்புசாமி கீழே குதித்து உயிர் தப்பினார். இதையறிந்த கொல்லிமலை வாழவந்திநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் அங்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் தடுப்பில் தொங்கிய மினிலாரியை போலீசார் மீட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்