பெங்களூருவில் மீண்டும் கனமழை
பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.
பெங்களூரு,
பெங்களூருவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சீரான இடைவெளியில் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த வாரம் பகலில் பெய்த மழையால் எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட நகரின் தென்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதியே தீவாக மாறியது.
இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் கனமழை பெய்தது. நள்ளிரவு 2 மணிக்கு தொடங்கி மழை விடிய, விடிய பெய்தது. இதனால் மெஜஸ்டிக்கில் உள்ள பி.எம்.டி.சி. மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. சிட்டி ரெயில் நிலையத்திலும் மழை நீர் குளம்போல் தேங்கியது. இதனால் அதிகாலையில் பஸ் நிலையங்களுக்கு வந்த பஸ்கள் பெரும் பிரச்சினையை எதிர்கொண்டது. அதன்பிறகு தண்ணீர் வடிய தொடங்கியது.
கே.ஆர்.மார்க்கெட், சிவானந்த சர்க்கிள், பசவேஸ்வரா நகர், பி.டி.எம்.லே-அவுட், சாம்ராஜ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங் களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்குள்ள மக்கள் நள்ளிரவில் தூக்கத்தை தொலைத்து, வீட்டுக்குள் வந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் இந்த கஷ்டத்தை அனுபவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
ஒகலிபுரம் ரோட்டில் 8 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேம்பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் சரிந்து விழுந்ததில் ரெயில்வே பாலச்சுவர் சேதம் அடைந்தது. அனந்தராவ் சர்க்கிளில் ரெயில்வே மேம்பாலம் சேதம் அடைந்து இரும்பு தடுப்புகள் கீழே விழுந்தன. அதை ரெயில்வே ஊழியர்கள் சரிசெய்தனர். மல்லேசுவரம் வயாலிகாவல் பகுதியில் ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்தது. இதில் சுமார் 10 இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. அருகில் இருந்த மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் அந்த பகுதியில் மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று அந்த மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். பெங்களூருவில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தயானந்தநகரில் 36.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாகேனஹள்ளியில் 11 மி.மீ.(மில்லி மீட்டர்), ஹொரமாவு 18 மி.மீ., சிங்கசந்திரா 20 மி.மீ., பொம்மனஹள்ளி 10.5 மி.மீ., எச்.எஸ்.ஆர்.லே-அவுட் 12 மி.மீ., கோரமங்களா 19 மி.மீ., ஹம்பிநகர் 20.5 மி.மீ., மாரப்பனஹள்ளி 25 மி.மீ., பேட்ராயனபுரா 18.5மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
மேலும் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலைகளில் பெரிதாக வாகன நெரிசல் உண்டாகவில்லை. பெங்களூருவில் அடிக்கடி மழை பெய்து வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மழை போதும் என்ற நிலைக்கு நகர மக்கள் வந்துவிட்டனர்.