வாணாபுரம் அருகே மர்ம காய்ச்சலுககு சிறுமி பலி

வாணாபுரம் அருகே மர்ம காய்ச்சலுககு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். முறையான சிகிச்சை அளிககவில்லை என்று கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-08 23:00 GMT

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே உள்ள சின்னகல்லபாடி பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் மகள் லீனா (வயது 5). இவளுக்கு கடந்த 4–ந் தேதி மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்ககப்பட்டாள். தொடர்ந்து சிகிச்சை அளிககப்பட்ட நிலையில் மர்ம காய்ச்சல் சரியாகததால் நேற்று காலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைககு கொண்டு செல்லும் வழியில் லீனா பரிதாபமாக உயிரிழந்தாள்.

கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லீனாவுக்கு டாக்டர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் தான் லீனா உயிரிழந்தாள் என்று கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கல்லேரி பஸ் நிறுத்தம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் திருவண்ணாமலை – திருககோவிலூர் சாலையில் 1 மணி நேரதிற்கு மேலாக போககுவரத்து பாதிககப்பட்டது.

மேலும் செய்திகள்